ஸ்டாலினை வாழ்த்திய பிரதமர் மோடி…! ‘அந்த’ வார்த்தையை கவனிச்சீங்களா..?
டெல்லி: வாங்க… சேர்ந்து செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்கம், அசாம், கேரளா, மற்றும் புதுச்சேரி மாநிலங்களை விட நாடே உற்று பார்த்த தேர்தல் முடிவு என்றால் அது தமிழக சட்டசபை தேர்தல்தான். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தின் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி தொடக்கத்தில் இருந்தது.
பின்னர் நேரம் நேரம் நகர, நகர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 150 தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கிறது. முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் ஸ்டாலின்.
திமுக தலைமைக்கும், ஸ்டாலினுக்கும் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்து எப்போது வரும்? எப்படி வாழ்த்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந் நிலையில் டுவிட்டர் வாயிலாக திமுக மற்றும் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறி உள்ளார். ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் என்றும், மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றவும், கொரோனா தொற்றில் இருந்து மீளவும் இணைந்து செயல்படுவோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.