கொரோனாவை விடுங்க… மக்களை போட்டு தாக்கும் டெல்டா வைரஸ் தெரியுமா…?
லண்டன்: இங்கிலாந்தில் ஒட்டு மொத்தமாக 60 சதவீதம் டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக பிரிட்டனில் முழு லாக்டவுன் நடைமுறையில் இருந்தது. கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் தற்போது அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
வரும் 21ம் தேதியுடன் லாக்டவுன் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவில் பரவ தொடங்கி இருக்கும் டெல்டா வைரஸ் இப்போது இங்கிலாந்தில் படு வேகமாக பரவி வருகிறது.
லெஸ்டர், போல்டன், பெட்போர்டு உள்ளிட்ட பல நகரங்களில் டெல்டா வைரஸ் அதிகளவில் பரவி உள்ளது. இதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு நடைமுறைப்படுத்தப்படாமல் போகலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரசினால் 60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பயணத்தை தவிர்க்குமாறு மக்களை அரசாங்கம் கேட்டு கொண்டு இருக்கிறது.