பிஎஸ்பிபி ராஜகோபாலுடன் தொடர்புடைய சினிமா புள்ளிகள்..! போலீசாரின் முக்கிய ஆதாரங்கள்
சென்னை: பிஎஸ்பிபி ஆசிரியர்க ராஜகோபாலனுடன் தொடர்புடைய சினிமா பிரபலங்கள் யார் என்ற விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.
சென்னை பிஎஸ்பிபி பள்ளி பாலியல் விவகாரத்தில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுசு, புதுசாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தையே உலுக்கிய இந்த பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் போலிசிடம் இருக்கும் நிலையில் நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் 3 நாள் போலீஸ் காவல் விசாரணையில் இருக்கிறார்.
இன்னும் 2 நாள் விசாரணை பாக்கி உள்ள நிலையில் போலீசார் பல்வேறு முக்கிய ஆதாரங்களை ராஜகோபாலனிடம் காட்டி விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் நடிக்க வைப்பேன் என்று கூறினீர்கள்? யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? என்று கேள்விகளை கேட்டு துளைத்துவிட்டனராம்.
எதற்காக பள்ளி நிர்வாகம் இத்தனை ரிஸ்க் எடுத்து, உங்களை காப்பாற்ற பார்க்கிறது என்றும் கேள்விகள் கேட்டு போலீசார் திணறடிக்கின்றனராம். எல்லாவற்றுக்கும் மேலாக, வாட்ஸ் அப் சாட்டிங் முக்கிய ஆதாரமாக போலீசாரிடம் உள்ளதாம். அதை பார்த்த ராஜகோபாலன் பல்வேறு சினிமா பிரபலங்களின் பெயர்களை கக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னமும் 2 நாள் விசாரணை பாக்கி உள்ள நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.