#Whatsapp வந்தாச்சு புதுசு..! வேற லெவல் அப்டேட்
வாட்ஸ் அப்பில் புது அப்டேட் ஒன்றை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்துகிறது மெட்டா.
உலகம் முழுவதும் அனேக பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது விஷயங்கள் வரும். அந்த வகையில் வாட்ஸ் அப் சேவையை மேலும் மெருகூட்டி வருகிறது.
முக்கிய அம்சாக நாம் ஆன்லைனில் இருக்கிறோமோ இல்லையா என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாத வண்ணம் ஒரு அப்டேட்டை கொண்டு வந்துள்ளது மெட்டா.
ஆன்லைன் இருக்கிறோம், இல்லை என்பதை தெரியப்படுத்த விரும்பாதவர்கள் சில ஆப்ஷன்கள் இருக்கிறது. வலது ஓரத்தில் உள்ள 3 புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் உள்ளே போக வேண்டும். அதனுள் பிரைவசி(privacy) உள்ளே போனால் லாஸ்ட் சீன் என்பதை அனைவருக்கும் தெரியபடுத்தலாம். அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளது, அதை நமது சவுகரியத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
இந்த புதிய வசதி விரைவில் அறிமுகம் என்று கடந்த ஆகஸ்ட் மாதமே மெட்டா அறிவித்து இருந்தது. இப்போது, செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. இந்த வசதி வந்தால் நாம் சாட்டிங்கில், ஆன்லைனில் இருந்தாலும் அதை மறைத்து கொள்ளலாம்.