நர்சிங் கோர்ஸ் படிச்சிருக்கீங்களா…? நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை காலி
நெல்லை: நர்சிங் முடித்தவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ஜூனியர் நர்ஸ் பணியிடம் காலியாக உள்ளது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு பணியிடத்துக்கு நர்ஸ் ஒருவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த வேலைக்கு பிளஸ் 2 முடித்த பின்னர், டிப்ளமோ ஜெனரல் நர்சிங் படித்திருக்க வேண்டும். நேர்காணல் மூலம் நர்ஸ் செலக்ட் செய்யப்படுவார்.
அடுத்த மாதம் 12ம் தேதி நேர்காணல் நடக்க இருக்கிறது. ஒரு பணி இடத்துக்கு விண்ணப்பிக்க 28 வயது தகுதி இருக்க வேண்டும். கல்வித் தகுதி, விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 12ம் தேதியில் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு நேரில் சென்று நேர்காணலை அட்டென்ட் செய்ய வேண்டும்.
நேர்காணலின் போது விண்ணப்பம், அனைத்து அசல் ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் 18000 ரூபாய் சம்பளம் பெறுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://nie.gov.in/ என்ற இணையதளத்தில் மேலதிக விவரங்களை அறியலாம்.