செம டுவிஸ்ட்..! இந்த மாநிலத்தின் எம்பியாகிறாரா எல். முருகன்….?
டெல்லி: மத்திய அமைச்சராகி இருக்கும் முருகன் புதுச்சேரியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து மாற்றப்படாமல் இருந்த மத்திய அமைச்சரவை முதல் முறையாக நேற்று மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மத்திய அமைச்சரவையில் 43 பேர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு இலக்காக்களும் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன்படி பெரிய ஆச்சரியமாக தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு தகவல் ஒளிபரப்பு, பால்வளம், மீன்வளத்துறை ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அவருக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முருகன் எப்படி மத்திய அமைச்சர் ஆனார் என்று இன்னமும் சொந்த கட்சிக்குள் ஒரு விவாதம் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. மத்திய அமைச்சராகி ஒருவர், எம்பியாக இருக்க வேண்டும். ஆனால் முருகனோ மாநிலங்களவையிலும் சரி… மக்களவையிலும் சரி இன்னமும் எம்பி ஆக வில்லை.
6 மாதங்களுக்குள் அவர் எம்பியாகி விட வேண்டும். எந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராவார் என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்து இருக்கிறது.
புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் முருகன். அதற்கான ஒப்புதல் தேசிய தலைமையிடம் இருந்து வந்துவிட்டதாக டெல்லியில் இருந்து வரும் கூறுகின்றன.
ராஜ்ய சபா எம்பிக்காக தமிழகத்தில் அதிமுகவின் ஆதரவை நாட வேண்டும் என்பதை அறிந்து அதை தவிர்க்க டெல்லி தலைமை முடிவு செய்திருக்கிறது. அதற்காக புதுச்சேரியில் இருந்து முருகனை ராஜ்யசபா எம்பியாக்க தலைமை முடிவு செய்திருக்கிறது.
புதுச்சேரியில் இருந்து எம்பியாகி இருக்கும் கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு பெறுகிறது. எனவே அந்த இடத்தில் இருந்து முருகன் எம்பியாகிறார். புதுச்சேரி பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூலமாக முருகனை தேர்ந்தெடுப்பது அனுப்பலாம் என்று டெல்லி தலைமை க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.