எடப்பாடி சீக்ரெட்டை ‘லீக்’ செய்த பொன்னையன்…? வெளியான பகீர் ஆடியோ…!
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு வெறும் 9 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளதாக பொன்னையன் கூறியதாக ஒரு உரையாடல் இணையத்தில் உலாவி பகீர் கிளப்பி வருகிறது.
அப்படி, இப்படி என்று ஏக களேபரங்களுக்க இடையே அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராகி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்சையும். அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட அடுத்த என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் இருதரப்பு ஆதரவாளர்களும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடிக்கு 9 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளனர் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாக ஒரு செல்போன் ஆடியோ இணையத்தை கலக்கி வருவதோடு, உண்மை அதிமுக தொண்டனை கலவரப்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பேசியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஆடியோவில் எடப்பாடிக்கு வெறும் 9 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். தொண்டர்கள் இரட்டை இலை பக்கமும், தலைவர்கள் பணத்தின் பக்கமும் உள்ளனர். ஓபிஎஸ்சை சமாதானம் செய்துவிடலாம் என்று எடப்பாடி நினைத்தது நடக்கவில்லை. அவரது ஆதரவு அணியில் 42 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. வேறு வழியில்லாமல் உள்ளார்.
பதவியை காப்பாற்றவே எடப்பாடி செயல்பட்டு வருகிறார். அம்மா, கட்சி என அனைத்தையும் விட்டுவிட்டு சாதி, பணத்தின் பின்னால் எல்லோரும் போய் கொண்டு இருக்கின்றனர் என்பதாக அந்த ஆடியோ போகிறது.
இந் நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பொன்னையன், அது தன் குரல் இல்லை, யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டு உள்ளனர் என்று கூறி உள்ளார்.