Sunday, May 04 12:08 pm

Breaking News

Trending News :

no image

ரஜினி அப்படிப்பட்டவரா…? மனைவி சொன்ன ரகசியம்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது பற்றி அவரது மனைவி லதா புதிய செய்தி ஒன்றை கூறி இருக்கிறார்.

நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது? ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துருவேன்… சினிமாவில் கைதட்டப்பட்ட இந்த டயலாக் நடிகர் ரஜினியின் அரசியல் என்ட்ரியில் கிளிக் ஆக வில்லை. அரசியலுக்கு வருவேன் என்று கூறி பின்னர் அதற்கு பை பை சொல்லி பல நாட்கள் கடந்துவிட்டது.

ஆனாலும் அவர் வருவார்,வருவார் என்று இன்னமும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இப்படிப்பட்ட சூழலில், ரஜினியின் அரசியல் நகர்வு குறித்து புதிய செய்தி ஒன்றை கூறி இருக்கிறார் அவரது மனைவி லதா.

கோச்சடையான் பட தயாரிப்பு விவகாரத்தில் உத்தரவாத கையெழுத்து போட்டதற்காக கோர்ட் படியேறி வருகிறார் அவர். இந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.

வழக்கு பற்றியும், அதில் நடந்து வரும் விஷயங்களை பற்றியும் கூறிய அவரிடம் ரஜினிகாந்தின் அரசியல் வருகை ஆப்சென்ட் ஆனது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது;

அவர் (ரஜினிகாந்த்) அரசியலுக்கு வராதது எனக்கு தான் ரொம்ப வருத்தம். காரணம் நான் அவரை தலைவராகவே பார்த்தேன். அவர் மிக சிறந்த தலைவர்.

அரசியலுக்கு அவர் வராததற்கு நியாயமான காரணம் உள்ளது. அவரது கருத்தை மதிக்க வேண்டும். அரசியலில் தான் அவர் இல்லையே தவிர, இப்பவும் தமிழகத்துக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்று கூறினார்.

அவரின் பேச்சை கேட்ட நெட் குசும்பன்கள், கோர்ட்டுக்கு போய் சட்டம் பற்றிய விவரம் தெரிந்த பின்னாடி தான், அரசியல் power தெரியுது என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Most Popular