தமிழகத்தில் குரங்கம்மை என்ட்ரி…? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சென்னை: தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் குரங்கம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந் நிலையில் இது குறித்து மா சப்பிரமணியன் கூறி இருப்பதாவது: ஆகஸ்ட் 7ம் தேதி கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரியில் குரங்கம்மை அறிகுறி இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாது.
இந்த விவகாரத்தில் யூகங்களை நம்ப வேண்டாம். தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வரும் இந்திய மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி எடுக்க 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும்.
உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் பயில வேண்டும் என்று உத்தரவுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.