4வது எம்எல்ஏவை தூக்கிய பாஜக…! மேற்கு வங்கத்தில் கலகலக்கும் திரிணமுல் காங்…!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எல்எல்ஏ பதவி விலகியுள்ளார்.
அம்மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது அரியணை ஏறி விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது பாஜக.
அதன் காரணமாக, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டு வருகிறது. அதன் எதிரொலியாக, மமதாவி திரிணமுல் காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் ஒவ்வொருத்தராக பாஜக பக்கம் கரையேற ஆரம்பித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் 3 எம்எல்ஏகள் திரிணமுல் கட்சியில் இருந்து விலகி மமதாவுக்கு அதிர்ச்சி அளித்தனர். இன்று மேலும் ஒரு எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். அவரின் பெயர் பனாஸ்ரீ மைதி. உத்தர்கந்தி தொகுதியில் எம்எல்ஏ.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டதாகவும் அவர் கூறி உள்ளார். இவருடன் சேர்த்து கடந்த 3 நாட்களில் மட்டும் 4 எம்எல்ஏக்கள் விலகி உள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் பாஜகவில் சேர உள்ளனர்.
அடுத்தடுத்து எம்எல்ஏகள் ராஜினாமா, பதவி விலகல் மமதா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அவர் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.