Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா துயரத்துக்கு மத்தியில் கொடிய தொற்று…! அறிவித்த மாநில அரசு


டெல்லி: கறுப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக அரியாணா அரசு பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

நாடு முழுக்க இப்போது கொரோனா ஒரு பக்கம் மக்களையும், ஆளும் அரசுகளையும் தூங்கவிடாமல் செய்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க, அனைத்து வித நடவடிக்கைகளும் ஜெட் வேகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் கறுப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக அரியாணா அரசு பட்டியலிட்டு அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியிருப்பதாவது:

அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு 40 பேர் சிகிச்சை எடுக்க வந்துள்ளனர். ம்யூகோர்மைகோசிஸ் எனப்படும் இந்த தொற்று அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற தொற்றுக்கு சிகிச்சை பெற யாரேனும் வந்தால் அவர்கள் முதன்மை மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவர்களிடமும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என்று கூறி உள்ளார்.

Most Popular