நடிகை குஷ்புவின் ‘மாஸ்’ மூவ்…! பாஜகவிடம் சூப்பர் டிமாண்ட்..?
டெல்லி: கட்சியில் பதவி தர வேண்டி தலைநகர் டெல்லியில் நடிகை குஷ்பு முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக சென்னையில் அண்ணா அறிவாலயத்திலும், பாஜகவின் கமலாலயத்திலும் ஒரு பரபர தகவல் ஓடிக் கொண்டு இருக்கிறது. பாஜகவில் கடும் அதிருப்தியில் இருக்கும் குஷ்பு திமுகவுக்கு தாவ போகிறார் என்றும், தமது தூதர்கள் மூலம் அறிவாலயத்தில் தொடர்ந்து பேசி வருவதாகவும் செய்திகள் கசிந்தன.
நடிகை குஷ்புவின் அரசியல் பயணம் திமுகவில் இருந்து பின்னர் காங்கிரசுக்கு மாறியது. அங்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை. தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலில் சிக்கி தவித்தவர் டெல்லி வரை சென்று கூறியும் ஒன்றும் நடக்கவில்லை.
டக் என்று யாரும் எதிர்பாராத தருணத்தில் பாஜக முகாமுக்கு மாறினார். கடும் அதிருப்தியில் குஷ்பு இருப்பதை அறிந்து கரெக்டாக காய் நகர்த்தி பாஜக இழுத்து கொண்டது. ஆனால் அவர் பெரிதும் எதிர்பார்த்த பதவி எதுவும் கிடைக்கவில்லை.
காத்திருந்தும் பலனில்லை என்பதால் அவர் மீண்டும் அறிவாலயம் வர உள்ளார், திமுகவில் சேர உள்ளார் என்றும் தகவல்கள் கசிந்தன. அவை அனைத்தும் கட்டுக்கதை என்று குஷ்பு உறுதிப்படுத்தி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் இப்போது அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு தகவல் பரபரக்க ஆரம்பித்துள்ளது. டெல்லியில் பாஜக தலைமையை சந்திக்க குஷ்பு சென்றிருக்கிறார் என்பது தான் அந்த தகவல்.
பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து பதவியை கைப்பற்றி விடுவது என்று முகாமிட்டுள்ளாராம். தேசிய அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிஷன் ரெட்டி, இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோரை சந்தித்து உள்ளாராம். தற்போதுள்ள நிலையில் தமக்கு கட்சியில் முக்கிய பதவி தருமாறு கேட்டுள்ளாராம். விரைவில் பதவி இல்லாமல் தமிழகம் திரும்ப போவதில்லை என்று உறுதியுடன் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
பதவி வாங்கிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிய இவரது எதிர்கோஷ்டிகள் தான்… திமுகவுக்கு போகிறார் என்று புரளி பேசியதாம். அதை எல்லாம் முறியடித்துவிட்டு டெல்லியில் இருந்து பதவியோடுதான் வருவார் குஷ்பு நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்….!