நடு ராத்தியில் அதிர்ந்த கோலிவுட்…! சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகை உயிருக்கு போராட்டம்
சென்னை: இளம் நடிகை யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக அறியப்படுவர் யாஷிகா ஆனந்த். அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். துருவங்கள் 16 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பிக் பாசிலும் வந்து கலக்கினார்.
தற்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் தமது நண்பர்களுடன் காரில் ஈசிஆர் ரோடில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி இருக்கும்…. உலகமே அமைதியாக இருந்த அந்த தருணத்தில் சீறி பாய்ந்து கொண்டிருந்த அவரது கார் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்று இடத்தில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
மோதிய விபத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அக்கம்பக்கத்தினர் காரில் உள்ள அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் யாஷிகா நண்பர் வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்தில் பலியானார். மற்ற அனைவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.