டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்…! ஷாக் ஆன குடிமகன்கள்
சென்னை: தலைநகர் சென்னையில் முக்கிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
கொரோனாவின் அலை படு தீவிரமாக இருந்த தருணத்திலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் பாதிப்பு எண்ணிக்கை குறைய, குறைய, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால் இப்போது பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பாதிப்புகளுக்கு காரணமாகி வரும் கோவையில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
கோவையில் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி மட்டுமே இயங்க ஆரம்பித்து உள்ளன. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
குறிப்பாக தி.நகர், ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார், கொத்தவால் சாவடி மார்க்கெட், புரசைவாக்கம் கடைவீதி, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட 9 முக்கிய இடங்களில் கடைகள் மூடப்பட்டு உள்ளன.
கடைகள் மட்டுமல்ல…. சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. மிண்ட் தெரு, செனாய்நகர், திருவல்லிக்கேணி பாரதி சாலை, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள், மேற்கு தாம்பரம் பகுதியில் 3 கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இதனால் அப்பகுதிகளில் உள்ள மதுப்ரியர்கள் திக்கு திண்டாடி அருகில் உள்ள மதுக்கடைகளுக்கு முண்டியடித்து கொண்டு செல்கின்றனர்.