எனக்கு காதலன் வேண்டும்…! ‘பிக்பாஸ்’ புகழ் ஓபன் ஸ்டேட்மெண்ட்…!
என்னை காதலிக்க, அன்பு பாராட்ட ஒருவர் வேண்டும் என்று பிக்பாஸ் புகழ் லாஸ்லியா ஓபனாக அறிவித்து உள்ளார்.
சின்னத்திரையில் ரசிகர்களை கட்டிப்போட்ட நிகழ்ச்சிகளில் ரொம்ப முக்கியமானது பிக்பாஸ். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சிக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த பிரபல நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் லாஸ்லியா. தமது கேரியரை செய்தி வாசிப்பாளராக தொடங்கியவர். இன்று கதாநாயகியாக உள்ளார்.
சமூக வலைதளங்களில் எந்நேரமும் படு சுறுசுறுப்பாக இருப்பவர் லாஸ்லியா. ஏதாவது புதுப்புது போட்டோக்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கலக்குவார்.
இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு தான் இளைஞர்களை சுண்டி இழுக்க ஆரம்பித்து உள்ளது. அழகாக, புடவையில் கலக்கலாக எடுக்கப்பட்ட போட்டோக்களை தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
அதன் கீழே லாஸ்லியா பதிவிட்டு உள்ள வரியை கண்டு தான் இளைஞர்கள் மயங்கி கிடக்கின்றனர். அவர் சொல்லி இருக்கும் வாசகம் இதுதான்:
என்னை, எந்தளவுக்கு காதலிக்க முடியுமோ, அந்தளவு காதலிக்க ஒருவர் தேவை என்று கூறி இளசுகளை கிறங்கடித்து இருக்கிறார். லாஸ்லியாவின் இந்த பதிவு லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.