25 நிமிடம்.. 30 கோரிக்கைகள்..! ஸ்டாலினுக்கு பிரதமர் தந்த பிராமிஸ்..!
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை முதல் முறையாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழக நலன்களுக்கான 30 கோரிக்கைகளை அடங்கிய பட்டியலை தந்துள்ளார்.
முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் இன்று காலை டெல்லி வந்தார். அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.
முதலமைச்சரான பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை என்பதால் நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
சரியாக மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியுடன் சந்திப்பு என்பதால் சரியாக 4.45 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரின் இல்லம் சென்றார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், லோக்சபா திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு சென்றிருந்தனர்.
5 மணிக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இருவரிடையே சந்திப்பு கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் நடைபெற்றது. சந்திப்பின் போது 30 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் ஸ்டாலின் கொடுத்தார். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி தமிழக வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தர உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.