திமுக கரைவேட்டி அணிந்தவரா..? அப்ப உங்களுக்கு 3 பிரியாணி இலவசம்
திமுக கரைவேட்டி கட்டி இருந்தால் 3 பிரியாணி இலவசமாக தரப்படும் என்று பிரியாணி கடை ஒன்று அறிவித்து அசத்தி இருக்கிறது.
வியாபாரம் என்றால் மார்க்கெட்டிங் என்பது ரொம்ப முக்கியம். பொருளின் பேனர், பிராண்டை பிரபலப்படுத்த பல நூதன முறைகளை பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்களை கவர தினுசு, தினுசாக விளம்பரம் செய்வது இயல்பு.
அதில் குறிப்பிடத்தக்க இலவசங்களை அறிவிப்பார்கள். அப்படித்தான் ஒரு பிரியாணி கடையில் நூதன அறிவிப்பை வெளியிட்டு அட… போட வைத்துள்ளார்கள்.
அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் சென்னை பிரியாணி என்று ஒரு கடை உள்ளது. இந்த கடையின் அசத்தல் அறிவிப்பு மற்ற கடைகளின் அறிவிப்பை விட பல மடங்கு மேல்.
தமிழர்களின் அடையாளமான வெள்ளை சட்டை வாடிக்கையாளர்கள் அணிந்து வந்தால் அவர்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். சட்டையுடன்,வெள்ளை வேட்டி அணிந்து வந்தால்… உங்களுக்கு 2 பிரியாணி இலவசம்.
இந்த அறிவிப்பு சூப்பரா இருக்கே என்று நினைப்பவர்களுக்கு கடைசியாக பிரியாணி கடை அறிவித்த விஷயம் சூப்பர்தான். திமுக கரைவேட்டி கட்டி வந்தால் உங்களுக்கு 3 பிரியாணி இலவசம்.
அசத்தலான பிரியாணி அறிவிப்பால் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனாவை விட்டு தள்ளுங்க.. பிரியாணி கிடைக்குமா என்று பாருங்க என்னும் அளவுக்கு கூட்டம் கூடுவது தான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது என்று புலம்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்….!