கோடி, கோடியாய் சம்பளம்..! ஆனா.. வாடகை வீட்டில் வசிக்கும் பிரபல நடிகர்…!
திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பாலிவுட் நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் வாடகை வீட்டில் வசித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரையுலகம் எப்போதுமே காஸ்ட்லியானது. படம் தயாரிப்பதாகட்டும், அதில் நடிப்பவர்களாட்டும்… பணம் கோடிக்கணக்கில் புழங்கும் துறை பாலிவுட் சினிமாத்துறை.
அப்படிப்பட்ட திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் பிரபல நடிகர் ஹிர்திக் ரோஷன் வாடகை வீட்டில் தான் இப்போதும் வசித்து வருகிறாராம்.
1980ம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமக்கான தனி இடத்தை பெற்றிருப்பவர். அவரது திரையுலகில் திருப்புமுனை படம் கஹானோ பியார் ஹை படம்தான். க்ரிஷ், தூம் என அட்டகாச படங்களில் கலக்கலாக நடித்து வலம் வந்தவர்.
பணம் கோடிகளில் கொட்டோ.. கொட்டோ என்று கொட்டுகிறது. ஆனாலும் இந்த மனிதர் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறாராம். பாலிவுட்டின் ஆஸ்தான நடிகர்கள் வசிக்கும் ஜூஹூ சாந்தி சாலையில் தான் வசிக்கிறாராம்.
வீட்டின் வாடகையை கேட்டால் உங்களுக்கு மயக்கம் தான் வரும். எவ்வளவோ தெரியுமா…? 8.5 லட்சம் மாத வாடகையாம். அதோடு வேறு ஒரு ஸ்பெஷல் விஷயமும் காத்திருக்கு…இவரோட பக்கத்து வீட்டுக்காரர் வேறு யாருமல்ல.. பிரபல நடிகர் அக்ஷய் குமார். கோடிகளில் சம்பளம் வாங்கி கொண்டு வாடகை வீட்டில் வசிப்பது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது என்ற பொருமலும் கேட்க தான் செய்கிறது.