சட்டசபை கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு…! எம்எல்ஏக்களுக்கு ஒரு கண்டிஷன்..!
சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் வரும் 11ம் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை முதல் கூட்டத்தொடர் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:
தமிழக 16வது சட்டசபை முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3வது தளத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தேர்தல் வெற்றி சான்றிதழை தவறாமல் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும். 12ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் 12ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க நாளை காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூடுகிறது.