Sunday, May 04 12:23 pm

Breaking News

Trending News :

no image

டீ குடிக்க ரூ. 30 லட்சம்…! ஆன்லைன் SIGN பண்ணிய ஆளுநர்…!


சென்னை: சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணிநேரங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டி அதே மாதம் 26ம தேதி அனுப்பப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் அந்த மசோதா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த மார்ச் 6ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டது.

மீண்டும் 2வது முறையாக கடந்த மாதம் 23ம் தேதி இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றால், அது நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்றார்.

கடும் கண்டனத்தை எழுப்பிய அவரது பேச்சை தொடர்ந்து, நேற்று ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டசபையில் கண்டன தீர்மானம் போடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் எல்லாமே தலைகீழானது, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்து இருக்கிறார்.

இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடினால், நடத்தினால் 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது 2தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் என்று சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆளுநர் மாளிகை நிதி முறைகேடுகள் பற்றிய பேச்சே கையெழுத்திட காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Most Popular