அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அட்மிட்..! ரசிகர்கள் ஷாக்…
ஐதராபாத்: ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஐதரபாத்தில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக போய் கொண்டிருந்தது. ஆனால் செட்டில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்தாலும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் அவர் திடீரென அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், ஆன போதிலும் மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீரென அட்மிட் செய்யப்பட்டு உள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.