6 நாளில் இப்படி நடந்தா எப்படி…? கவலைப்படும் பெண்கள்
சென்னை: தொடர்ந்து உயர்ந்து கொண்டு வரும் தங்கத்தின் விலையால் இல்லத்தரசிகள் கவலையில் இருக்கின்றனர்.
பொருளாதார சரிவு எதிரொலியாக தங்கத்தின் மீதான மதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை நோக்கியே இருக்கிறது. 22 காரட் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதாவது 37,760 ரூபாயாக ஒரு சவரன் ஆபரண தங்கம் விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4728 ரூபாயாக இருக்கிறது. 24 காரட் தூய தங்கம் 40 ,040 ரூபாயாகவும், ஒரு கிராம் 5130 ரூபாயாகவும் உள்ளது.
6 நாட்களில் மட்டும் சவரனுக்கு 780 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். ஆனால் ஆறுதல் அளிக்கும் விதமாக வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகுள் குறைந்து ரூ.60.80 காசுகளாகவும் கிலோ 300 ரூபாய் குறைந்து 60,800 ரூபாயாகவும் இருக்கிறது.