கவுண்டமணி ரிட்டன்ஸ்…! எந்த ஹீரோவுடன் தெரியுமா…?
சென்னை: அட்டகாச காமெடியன் கவுண்டமணி நடிகர் சிவ கார்த்திகேயனுடன் கைகோர்த்து நடிக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துள்ளது.
நகைச்சுவையில் கோலோச்சிய கவுண்டமணியை யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. கால்ஷீட் இல்லாத அளவுக்கு பிசியாக இருந்த அவர் பின்னர் படிப்படியாக படங்கள் ஒப்புக் கொள்வதை குறைத்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் ஒத்துழைக்காத காராணத்தால் கோலிவுட்டை விட்டு சற்றே தள்ளி இருந்தார்.
மரங்கள் ஓய்வை விரும்பும்… ஆனால் காற்று விடாது என்பார்கள். அதுபோல ஓய்வை கவுண்டமணி விரும்பினாலும் கோலிவுட் அவரை விடவில்லை. பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் மடோனா. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து ரிட்டர்ன் ஆகும் கவுண்டமணியை வரவை அவரது ரசிகர்கள் இப்போது எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்து உள்ளனர்.