Sunday, May 04 12:48 pm

Breaking News

Trending News :

no image

ஒரு வார்த்தை…சிக்கிட்ட பிரபல நடிகை


விளக்கம் கொடுக்கிறோம் என்று கூறி, ஒரு அறிக்கை வெளியிட்ட பிரபல நடிகை நயன்தாரா அதில் சொன்ன ஒரேயொரு வார்த்தை பற்றி இப்போது பெரும் பேச்சாக இருக்கிறது.

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகையான நயன்தாராவை பெரும்பாலானவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். முன்னணி நடிகர்களுடன் நடித்த, தமது திறமையை தனி ஆவர்த்தனமாக காட்டியவர்.

அவரின் நடிப்பு திறமைக்கு பல படங்கள் தீனி போட்டாலும், ஒரேயொரு படம் இப்போது நயனுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. அது அவரின் 75வது படமான அன்னபூரணி படம்தான். இந்த படத்தில் மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக பல வசனங்கள், காட்சிகள் இடம்பிடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

சர்ச்சைகள் அதிகம் ஆனதை அடுத்து ஒரு விளக்க அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் அந்த அறிக்கையின் வாசகங்கள் உள்ளன.

அதில் அவர் கூறி உள்ளதாவது: படம் வணிக நோக்கில் இல்லாமல் நல்ல கருத்துகளை வெளியிடும் படம் படமாக்கி இருந்தோம். ஆனால் எங்களை அறியாமல் சிலர் மனங்களை புண்படுத்தும் வகையில் இருப்பதை உணர்ந்துள்ளோம்.

தியேட்டரில் ரிலீசாகி, ஓடிடியில் நீக்கப்பட்டதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. மதஉணர்வுகளை புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.20 ஆண்டுகால திரைவாழ்க்கையில் நல்லவற்றை மற்றவர்களுக்கு பரப்புவது என்பதை விரும்புகிறேன் என்று நயன்தாரா குறிப்பிட்டு உள்ளார்.

அவரின் மன்னிப்பு+வருத்தம் இரண்டை தவிர்த்து வேறு ஒரு புதிய சர்ச்சைக்கு விளக்க கடிதம் அடிகோலி உள்ளது. தமிழ் படத்தில் நடித்துவிட்டு எதற்கு ஆங்கிலத்தில் மன்னிப்பு கடிதம், இது உலக மகா நடிப்பு என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

வெறும் வருத்தம் மட்டும் என்று கூறி இருந்தால் ஓகே… அதென்ன ஜெய் ஸ்ரீராம், யாரை சமாதானப்படுத்த என்றும் விமர்சித்துள்ளனர்.

Most Popular