ரூ.4000 ஆயிரம் கோடி.. சென்னை எஸ்கேப்…! சபாஷ்… CM ஸ்டாலின்
சென்னை: 4000 கோடி ரூபாய்க்கு திட்ட பணிகள் நடந்ததால் தான் சென்னை மிதக்காமல் தப்பி இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
சென்னையை பிரித்து போட்ட மழையை இன்னும் பல ஆண்டுகள் நாம் நினைவில் வைத்திருக்கலாம். அதிகாரிகள், அமைச்சர்கள் என ஒட்டு மொத்த அரசு இயந்திரமே வெள்ள நிவாரணம், மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாய் இருக்கிறது.
அதே நேரத்தில் மழை அரசியலை எதிர்க்கட்சிகள் கைகளில் எடுத்து கபடி ஆடி வருகின்றன.4000 கோடி ரூபாய் திட்டப்பணிகள் ஏப்பம் விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் போடப்பட்டன. ஹேஷ்டேக்கும் பிரபலமானது.
இந் நிலையில் 4000 கோடி ரூபாய் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;
4000 கோடி ரூபாய்க்கு பணிகள் செய்தும், சிலர் சென்னை மிதக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். அப்படி பணிகள் நடந்ததால் வரலாறு காணாத மழைக்கு, 47 ஆண்டுகளில் இல்லாத மழைக்கு சென்னை தப்பித்து இருக்கிறது. சென்னை உடனடியாக மீண்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பணிகள், கடந்த2 ஆண்டுகளில் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளன. மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு 5000 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கேட்க உள்ளோம். திமுக ஆட்சியில் அனைத்து பணிகளும் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.