ஆடி மாதம்..! இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாமே டாப்பாக இருக்கும்…!
சென்னை: ஆடி மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. சூரியன் கடக ராசிக்கு பயணிக்கும் இந்த மாதத்தில் 12 ராசிகளின் நிலைமை எப்படி இருக்கும்…இதோ பார்ப்போம்…
மேஷம்:
இந்த ராசிகாரர்களுக்கு ஆடி ஒரு அற்புதமான மாதம். பணவரவுக்கு குறைவில்லை. உடலில் இருக்கும் கோளாறுகள் நிவர்த்தியாகும். ஊழியர்களுக்கு பணியிடத்தில் பாராட்டு, வீடு, வாகன வசதி மேலோங்கும்.
ரிஷபம்:
நிம்மதி, சந்தோஷம் இந்த மாதம் முழுவதும் மேலோங்கும். ஆனால் வேலையை ராஜினாமா செய்துவிட வேண்டாம். கடவுள் அனுக்கிரகம் உண்டு.
மிதுனம்:
இந்த மாதம் நீங்க கோபப்படவே கூடாது. புதிய வேலைக்கு வாய்ப்பு உண்டு. பழைய வேலையில் முன்னேற்றம் காணப்படும்.
கடகம்:
காதலில் நிச்சயம் ஜெயிப்பீர்கள். பணவரவுக்கு பஞ்சமில்லை, முன்னோர்களின் ஆசிர்வாதமும், வாழ்த்துகளும் கிடைக்கும்.
சிம்மம்:
வரவு இருக்கும் அதே நிலை தான் செலவிலும் இருக்கும். உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டிய தருணம். கடவுளை தரிசிப்பது உகந்தது.
கன்னி:
செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வேலையில் மாற்றம் வரலாம். காரியம் தான் முக்கியம், வீரியம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
துலாம்: உறவினர்களுடன் பிரச்னைகளை தவிர்க்கவும். வேலையில் எதிர்பார்த்தது கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான். தைரியத்துடுன் எதிர்கொண்டால் வருமானம் சிறப்போ, சிறப்பு.
தனுசு: செலவீனம் அதிகமாகும். கையில் உள்ள பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய தருணம். பயணத்தை தவிர்ப்பது உசிதம்.
மகரம்: சனீஸ்வரன் ராசியில் உள்ளதால் சிறந்த மாற்றங்கள் வரும். தொழில் நட்டம், பண பிரச்னைகள் தீரும்.
கும்பம்: உடல்நிலையில் அவசியம் அக்கறை தேவை. வருமானத்தில் பாதகம் இல்லை. பணியிட மாற்றத்துககு வாய்ப்புகள் உண்டு.
மீனம்: பேசினால் லாபம் வரும். அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தெய்வ அனுக்கிரகம் உள்ளதால் நினைத்தது நடக்கும்.