Sunday, May 04 12:10 pm

Breaking News

Trending News :

no image

டிடிவி தினகரன் பற்றி… பழனியப்பன் சொன்ன 'ஒற்றை' வார்த்தை…!


சென்னை: டிடிவி தினகரன் பற்றி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவில் இருந்து தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். அவரது இந்த நகர்வு அமமுகவை செமத்தியாக அதிர வைத்துள்ளது.

திமுகவில் இணைந்த பழனியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு பல நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆகவே தான் அவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறி இருக்கிறது.

அவரது செயல்பாடுகள், அணுகுமுறை, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு பிடித்திருக்கிறது. ஆற்றல்மிக்க தலைவராக உருவெடுத்து இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று அனைவரும் நடந்தால் தான் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் என்னை திமுகவில் இணைத்து கொண்டேன். அமமுகவில் எனக்கு மனக்கசப்பு எதுவும் கிடையாது.

டிடிவி தினகரன் நல்ல மனிதர். அவ்வளவுதான் சொல்ல முடியும். முதல்வர் ஸ்டாலினை விரும்பி அவரின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு நானே வந்து திமுகவில் என்னை இணைத்து கொண்டு இருக்கிறேன்… அவ்வளவுதான்.

எதிர்காலத்தை பற்றி நான் என்றைக்குமே கவலைப்படுவது இல்லை. உழைப்பதற்காக வந்திருக்கிறேன். என்னுடைய பகுதியில் திமுகவை வளர்ப்பேன். தமிழக மக்கள் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆகவே அவரின் கீழ் பணியாற்றுவதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பழனியப்பன்.

Most Popular