நாளை வாக்கு எண்ணிக்கை..! தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு…!
சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது அமைதியாகவும், ஆற்றலுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அதிமுக கட்டளையிட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக உள்ள நிலையில் அதிமுகவினருக்கு கட்சி தலைமை அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிட்டு உள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அநத அறிக்கையில் இருவரும் கூறி இருப்பதாவது:
வாக்கு எண்ணிக்கையின் போது அமைதியாகவும், ஆற்றலுடனும் நடந்து கொள்ள வேண்டும். அண்ணா வழியில் அமைதியாகய் நடைபெறட்டும் வெற்றி விழா. அண்ணா வழியில் அமைதியாகவும், எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும, ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் பணிகள் நடக்கட்டும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தொண்டர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.