Sunday, May 04 11:45 am

Breaking News

Trending News :

no image

கொரோனா டெஸ்ட்டுக்கு இனி இவ்வளவு காசு கொடுத்தால் போதும்…!


சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா டெஸ்ட்டுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந் நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது: தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டப் பயனாளிகளுக்கும் பொது மக்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான கட்டணம் ரூபாய் 800- லிருந்து ரூபாய் 550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூபாய் 600- லிருந்து ரூபாய் 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக ரூபாய் 300 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular