பிரயோஜனமாக ஏதாவது பேசுங்க… ! பிரதமர் மோடியை ‘எதிர்த்த’ முதல்வர்…!
ராஞ்சி: ஏதாவது பிரயோஜனமாக பேசினால் நன்றாக இருக்கும் என்று பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து இருக்கிறார் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.
நாடு முழுவதும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது கொரோனா பரவல். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது.
டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா என பல மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முழு ஊரடங்குக்கு தயாராகி வருகின்றன.
நேற்றைய தினம் பிரதமர் மோடி, ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசித்தார். இது குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் பதிவிவேற்றி உள்ள ஒரு டுவிட்டர் பதிவு பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது இதுதான்: பிரதமர் என்னை அழைத்தார். தன்னுடைய மனதில் உள்ளது என்னவோ அதை பற்றி மட்டும் தான் அவர் பேசினார். ஏதாவது பயனுள்ள வகையில் பிரதமர் மோடி பேசி இருந்தால் நான் என்ன பேசுகிறேன் என்பதை கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறி உள்ளார்.