நாடு முழுவதும் 2 மாதங்கள் முழு ஊரடங்கு….? வெளியான ‘திடுக்’ தகவல்….!
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த 2 மாதங்கள் இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம் தேவை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்களில் நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் எங்கோ சென்றுவிட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகளும், சுடுகாடுகளில் பலியானவர்களின் சடலங்களும் வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பபடுகிறது.
இந் நிலையில் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகம் உள்ள மாவட்டங்களில் 2 மாதங்கள் முழு ஊரடங்கு அவசியம் என்று இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி தலைவர் பல்ராம் பார்கவா கூறி உள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை அளித்த பேட்டி ஒன்றில் அவர் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் இருக்கும் 700க்கு அதிகமான மாவட்டங்களில் 533 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
கொரோனா பாதிப்பு உயிரிழப்பு 5 முதல் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 10 சதவீதம் என்பது எப்போது 5 சதவீதமாக குறைகிறதோ அந்த தருணத்தில் ஊரடங்கை தளர்த்தி கொள்ளலாம் என்று பல்ராம் பார்கவா கூறி இருக்கிறார்.