போதும்டா சாமி… கார் விவகாரத்தில் நடிகர் விஜய் அதிரடி முடிவு…! ரசிகர்கள் ஷாக்…
சென்னை: கார் விவகாரத்தில் நீதிமன்றம் விதித்த அபராத தொகை ரூ.1லட்சத்தை கட்ட முடியாது என்று நடிகர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இன்றைய தேதிப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். ஆனால் அவர் வாங்கிய ஒரு வெளிநாட்டு கார் போதும் போதும் என்று உலுக்கி வருகிறது.
2012ம் ஆண்டு அவர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் கார் ஒன்றை வாங்கினார். அதுவும் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தளர்வு கோரி நடிகர் விஜய்யும் மனு அளித்து இருந்தார்.
9 ஆண்டுகால விசாரணைக்கு பின்னர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு விஜய்க்கு 1 லட்சம் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது. இந்த அபராதத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என்று கோர்ட் கூறியது.
காருக்கு வரிகட்ட தயார், ஆனால் என்னை தேசதுரோகி போன்று சித்தரித்து தனி நீதிபதி கூறிய கருத்துகளை நீக்க வேண்டும், அவர் விதித்த 1 லட்சம் ரூபாயை நீக்க வேண்டும் என்று கோரி உள்ளார். அவரின் மேல் முறையீடு விவாகரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் நடிகர் விஜய் தரப்பு தமது நிலைப்பாட்டில் உள்ள முக்கிய விஷயத்தை மீண்டும் வலியுறுத்தி விளக்கியது. அதாவது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறேன்… எனவே 1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாக வழங்க விருப்பம் இல்லை என்று கூறி உள்ளது.