Sunday, May 04 12:46 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை  பார்க்கலாம்:

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் காணப்படுவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டு மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் நலனுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

சென்னை உள்பட கிட்டத்தட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மும்முனை போட்டி நடக்கும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில், பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.

556வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பேராவூரணி முதல் பட்டுக்கோட்டை வரை என் மண் என் மக்கள் நடைபயணத்தில் ஈடுபடுகிறார்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி இருக்கும் இந்நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள், உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு உள்ளனா என்பது பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று கவுகாத்தியில் நடக்கிறது. ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி இன்றும் வெற்றி பெற்றால் 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் நிலை காணப்படுகிறது.

ஐபிஎல் போன்று ஐஎஸ்பிஎல் என்ற புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகமாகிறது. முழுக்க முழுக்க டென்னிஸ் பந்தில நடத்தப்படும் இந்த தொடரில் மும்பை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரை சேர்ந்த 6 அணிகள் இடம்பெறுகின்றன.

Most Popular