Sunday, May 04 12:21 pm

Breaking News

Trending News :

no image

உங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா..? ஸ்டாலினின் மெகா மூவ்


சென்னை: தமிழக சட்டசபையில் அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

பொதுவாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஒரு பிம்பம் உண்டு. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் ஏழையான குடும்பத்தை பின்புலமாக கொண்டவர்கள் என்ற கருத்து உள்ளது.

மாணவர்களின் இந்த ஏற்றத்தாழ்வை கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பொறியியல், கால்நடை, வேளாண்மை, சட்டம் ஆகிய படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் படிப்புக்கு தடைக்கல்லாக இருக்கும் காரணிகள் என்ன என்பது பற்றி அறிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, ஏனைய தொழிற்கல்வி படிப்புகளுக்கும் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்ய திமுக அரசு தீர்மானித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகும் என்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Most Popular