Sunday, May 04 12:10 pm

Breaking News

Trending News :

no image

ஷங்கர் பட பிரபல ‘நாயகன்’ திடீர் மரணம்..? இணையத்தில் வெளியான அதிர்ச்சி டுவிட்…!


சென்னை: பிரபல நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியானதால் திடீர் பரபரப்பு உருவானது.

கோலிவுட்டில் சாக்லேட் ஹீரோ என்று அடையாளப்படுத்தப்பட்டவர் இளம் நடிகர் சித்தார்த். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

ஆனால் சாக்லேட் என்ற இமேஜ்ஜை தாண்டி கலவையான படங்களில் நடித்து புகழ் பெற்றார். காமெடி, ஆக்ஷன் என்று கலந்து கட்டி அடித்தார். தற்போதும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவை தாண்டி நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்னைகளில் ஆர்வமாக இருந்து கருத்துகளை அவர் கூறி வருவார். இந் நிலையில் அவர் இறந்து விட்டதாக ஒரு தெலுங்கு யுடியூப் சேனலில் செய்தி பரவியது.

அதாவது, அந்த செய்தியில் இளமையான காலத்தில் இருந்து காலமான திரையுலக பிரபலங்கள் பற்றி ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதில் இயம் வயதில் இறந்த 10 தென்னிந்திய சினிமா பிரபலங்கள் என்ற பெயரில் அந்த செய்தி இடம்பெற்றுள்ளது.

நடிகைகள் சவுந்தர்யா, சில்க் ஸ்மிதா, ஆர்த்தி அகர்வால் என ஒரு பட்டியல் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் தெலுங்கு நடிகர் படத்துக்கு பதிலாக சித்தார்த்தை வெளியிட்டு இறந்துவிட்டார் என்று செய்தி பதிவிட்டு உள்ளனர்.

இதை எப்படியோ அறிந்து நொந்து போன சித்தார்த், டுவிட்டரில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது: இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலிடம் விளக்கம் கேட்டேன். அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடியோவில் எந்த தவறும் சொல்லி உள்ளனர்… அடப்பாவிகளா..! என்று குறிப்பிட்டு உள்ளார்.

Most Popular