Sunday, May 04 12:11 pm

Breaking News

Trending News :

no image

விசிக அட்டாக்…! தொக்காய் மாட்டிக்கிட்ட ‘சேரி’ குஷ்பு…!


சென்னை; சேரி மொழி என்ற சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

வில்லன் +  காமெடி நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய சம்பவம் அவருக்கு ஏக தலைவலியை கொடுத்து இருக்கிறது. போலீஸ், நீதிமன்றம் என்று அவர் சுற்றி வர, இதே விவகாரத்தில் த்ரிஷாவுக்கு சப்போர்ட் செய்த நடிகை குஷ்புவும் வம்பில் சிக்கி இருக்கிறார்.

மணிப்பூருக்கு பேசாமல், மன்சூர் அலிகான் விவகாரத்தில் பேசுகிறார் குஷ்பு என்று கண்டனங்களும் எழுந்தன. அதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்த அவர், விமர்சிப்பவர்களை போல சேரி மொழியில் தம்மால் பேச முடியாது என்று போட்டு தாக்கினார்.

ஜாம்பவான் கணக்கில் ஜம்மென்று பதிவிட்டாச்சு என்று இருந்த அவருக்கு சிக்கலே அங்கிருந்து ஆரம்பமானது எனலாம். என்னது? சேரி மொழியா..? அப்படி ஒன்று இருக்கா? பொறுப்பான பெண்மணியான நடிகை குஷ்பு இப்படி குறிப்பிடலமா? என்று கமெண்டுகள் குவிந்தன.

விஷயம் வேறு ரூட்டில் போகுதே என்று சுதாரித்த குஷ்பு, பிரெஞ்ச் மொழியில் சேரி என்றால் அன்பு என அப்படி, இப்படி என மழுப்பினார். இப்படியாக சர்ச்சைகள் அவரை சுற்றி சுற்றி வர… குஷ்புவின் இந்த பதிவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறங்கி இருக்கிறது.

அக்கட்சியின் நிர்வாகி கார்த்திக் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குஷ்புவுக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார். தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசி இருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

விவகாரம் முடிந்துவிட்டது என்று நினைத்த நிலையில், போலீசில் புகார் வரை சென்றிருப்பதால் நடிகை குஷ்பு அப்செட் ஆகி இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆக இந்த சேரி மொழி விவகாரம் இப்போதைக்கு முடியாது என்பது தான் தற்போதுள்ள சூழல்.

Most Popular