RIP Sankaraiah ரெட் சல்யூட்…!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ. சங்கரய்யா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.
சுதந்திர போராட்ட தியாகியும், முதுபெரும் அரசியல் தலைவருமான அவர், அண்மை காலமாக உடல்நலம் குன்றி இருந்தார். அதற்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவமனையில் தோழர் சங்கரய்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 9.30 மணி அளவில் தமது 102வது வயதில் காலமானார்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்படும் அவரது உடல், சென்னையில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 3 முறை எம்எல்ஏ, மிக சிறந்த அரசியல் தலைவர் என்ற பெயருக்கும், பெருமைக்கும் சொந்தமான மற்றும் பொருத்தமான அவருக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.