#RIPCaptain விஜய் அப்பாவின் நிறைவேறாத ஆசை…! கண்ணீருடன் ஆடியோ
விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை வெளியிட்டு உள்ள நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தமது நிறைவேறாத ஆசை ஒன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகர் விஜயின் தொடக்க கால சினிமா பயணத்துக்கு கை கொடுத்தவர் விஜயகாந்த். சக்சஸ் இயக்குநராக இருந்தாலும் மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்தை அணுகினார். செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் தம்பியாக நடித்தார் விஜய்.
திரைத்துறையில் மட்டுமல்லாது, சாதாரண மக்களுக்கும் உதவிகள் செய்து தற்போது மறைந்துவிட்ட அவரை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்ஏ சந்திரசேகர் ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஆடியோவில் தமது நிறைவேறாத ஆசை ஒன்றை கூறி வேதனையை வெளியிட்டு உள்ளார். அவர் கூறி உள்ளதாவது;
என் இனிய நண்பர் விஜயகாந்த்தை உயிரோடு இருக்கும் போதே ஆறத்தழுவி முத்தமிட வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக ஆசைப்பட்டேன். அதற்காக முயற்சியும் செய்தேன். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது ஒரு உயிரற்ற உடலை பார்க்ககூடாது என கடவுள் நினைத்தாரோ இல்லையோ, தெரியவில்லை. இந்த நாளில் தான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் அரசியல் உலகிலும் ஒரு சகாப்தம் இன்று முடிந்திருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட வேறொன்றும் தெரியவில்லை, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் என்று கூறி இருக்கிறார்.