என்ன இப்படி ஆயிடுச்சே..! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரப்போகும் புதிய சிக்கல்…!
சென்னை: வெளிச்சந்தைகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெறுவதில் தமிழக அரசுக்கு இப்போது புதியதாக சிக்கல் எழுந்துள்ளது.
எப்படியாவது கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு போராடி வருகிறது. பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி இருக்கிறது.
ஊரடங்கு நடவடிக்கைகள், சுகாதார தடுப்பு பணிகள் ஒரு பக்கம் இருக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் தடுப்பூசிகளை பெறுவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. அதில் ஒரு முக்கிய அம்சமாக உலகளாவிய டெண்டரை தமிழக அரசு கோரியிருக்கிறது.
3 மாதங்களுக்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை தமிழக அரசு இப்போது இலக்காக கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக விரைவில் தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதற்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.
அதற்கான தொடக்கம் பஞ்சாப் அரசில் இருந்து தொடங்குகிறது. தமிழகம் போன்றே பஞ்சாப் மாநில அரசும் உலகளாவிய தடுப்பூசி டெண்டரை கோரி இருக்கிறது.. ரஷ்யாவின் ஸ்புட்னிக், பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. அதில் பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வினியோகம் செய்ய முடியாது என்றும் மத்திய அரசுகளுக்கு தான் சப்ளை செய்வோம் என்றும் கூறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மற்ற நிறுவனங்கள் கப்சிப் என்று இருக்கின்றன.
இதே சிக்கல் தமிழகத்துக்கும் எழலாம் என்று கூறப்படுகிறது. சர்வதேச நிறுவனங்கள் தடுப்பூசிகளை வழங்க முன்வராமல் போனால் அது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அனைத்து பிரச்னைகளையும் லாவகமாக எதிர்கொண்டு, தமிழக அரசு சமாளிக்கும் என்று அதிகாரிகள் தகூறுகின்றனர்.