Sunday, May 04 12:42 pm

Breaking News

Trending News :

no image

நேத்து சொல்லிட்டு.. இன்னிக்கு தோழியை 2வது கல்யாணம் செய்த முதல்வர்…!


சண்டிகர்: பஞ்சாப்பின் முதலமைச்சர் பகவந்த் மன், தமது தோழியை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி கட்டிலில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் 48 வயது நிரம்பிய பகவந்த் மன். அவர் தமது தோழியும் மருத்துவருமான குர்ப்ரீத் சிங்கை 2வது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

சீக்கிய மரபுப்படி, பகவந்த் மன் வீட்டில் இவர்களின் திருமணம் நடந்தேறி உள்ளது. கல்யாணம் விவரம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இன்று திருமண நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

இந்த திருமணத்தின் மூலம், ஆட்சி கட்டிலில் அமர்ந்தவாறே கல்யாணம் பண்ணிக் கொண்ட முதல் பஞ்சாப் மாநில முதலமைச்சர் என்ற பெயரை பெற்று இருக்கிறார் பகவந்த் மன்.

பகவந்த் மன்னை கரம்பிடித்துள்ள குர்ப்ரீத் சிங் 4 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்திருக்கின்றனர். முதல்வரான பின்னரே கல்யாணம் என்று தாய் கோரிக்கை வைக்க, அதன்படி தற்போது மணமுடித்துள்ளார்.

பிரியாணி, டால் மக்கானி, 6 வித்தியாசமான சாலட்டுகள், இனிப்பு வகைகள், பழச்சாறுகள் என ஏகப்பட்ட மெனு அயிட்டங்கள் கல்யாணத்தையே அசர வைத்துள்ளன.

Most Popular