Sunday, May 04 01:04 pm

Breaking News

Trending News :

no image

லீக்கானது ரஜினியின் கட்சி பெயர், சின்னம்…? ரசிகர்கள் குஷி… கட்சிகள் ஷாக்..!


சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கட்சி பெயர் அனைத்திந்திய மக்கள் கட்சி என்றும், அதன் சின்னம் ஆட்டோ என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருவாரா? மாட்டாரா? என்று ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் கடைசியில் அரசியலுக்கு வந்தேவிட்டார். ஜனவரியில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியயும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தியும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 31ல் அறிவிப்பு, ஜனவரியில் கட்சி தொடக்கம் என்று அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் அதற்கான பணிகள் தீவிரமாக அரங்கேறி உள்ளன. கட்சியின் பெயர்? கட்சியின் சின்னம்? கட்சிக் கொடி எப்படி இருக்க வேண்டும் என்று பல கட்டமாக ஆலோசித்துள்ள ரஜினிகாந்த், கட்சியின் பெயரை பதிவு செய்வது பற்றிய சில பணிகளையும் முடித்து வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது டெல்லி தேர்தல் ஆணையத்தில் ரஜினிகாந்த ஏற்கனவே கட்சி ஒன்றை பதிவு செய்து வைத்துள்ளார். அதன் பெயர் மக்கள் சேவை கட்சி. ஆனால் இந்த கட்சியை இன்னமும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வில்லை. ஒருவேளை இந்த பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பதற்கான  சாத்தியக் கூறுகள் இருப்பதாக தகவல்கள் கூறி உள்ளன.

அதே நேரத்தில், 234 தொகுதிகளிலும், தமது வேட்பாளர்களை களம் இறக்க, பொதுவான தேர்தல் சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் சேவை கட்சியானது விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த விண்ணப்பத்தில் ரஜினிகாந்தின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் சின்னமாக பாபாவின் இருவிரல் முத்திரையும், 2வது சாய்ஸாக ஆட்டோவும் கோரப்பட்டு உள்ளது. விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறது. அநேகமாக மக்கள் சேவை கட்சி என்பது கட்சியின் பெயராகவும், சின்னம் ஆட்டோவாகவும் இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையறிந்த ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Most Popular