சட்டசபை திமுக தலைவராக தேர்வானார் ஸ்டாலின்…! தொண்டர்கள் உற்சாகம்…!
சென்னை: சட்டமன்ற திமுக தலைவராக ஸ்டாலின ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 159 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களை விட திமுக வெற்றி பெற்றுள்ளது. இந் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டசபை திமுக குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான தீர்மானத்தை கட்சியின் பொது செயலாளர் முன் மொழிந்தார். இதையடுத்து, நாளை திமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ராஜ்பவன் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
சட்டமன்ற திமுக தலைவராக மு க ஸ்டாலின் செய்யப்பட்டதை கட்சி தொண்டர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.