Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கொரோனா நிவாரணம் 400 ரூபாய்…! அசத்திய ஸ்டாலின்


சென்னை : சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கொரோனா நிவாரணமாக 4000 ரூபாயாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார்.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 'திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு முதல் கதாநாயகன், 2வது கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்றும் டி.ஆர்.பாலு  தலைமையிலான குழு திமுக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது என்றும் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்..

 

*திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

 

*அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

 

*பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்

 

*கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும்

 

*பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்

 

*ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

 

*அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்

 

*சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும்.

 

Most Popular