பிரபல நடிகர் திடீர் மரணம்..! கலங்கி தவிக்கும் திரையுலகம்
திருவனந்தபுரம்: பிரபல மல்லுவுட் நடிகரான பாபுராஜ் வாழப்பள்ளி காலமானது கேரள திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
திருச்சூர் வாழப்பள்ளியை சேர்ந்தவர் பாபுராஜ். ஊர் பெயரும் சேர்ந்து கொண்டதால் பாபுராஜ் வாழப்பள்ளி என்று அழைக்கப்பட்டார். கோழிக்கோட்டில் குதுருசால் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அடிப்படையில் நாடக கலைஞரான பாபுராஜ், அங்கிருந்து அப்படியே வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தார். ஏராளமான சினிமாக்கள், சீரியல்களில் திறம்பட நடித்து பெயர் பெற்றவர்.
மாஸ்டர் பீஸ், குண்டா ஜெயன், பிரேக்கிங் நியூஸ் என பல படங்களில் நடித்தவர். இந் நிலையில் திடீரென நெஞ்சுவலியால் துடித்த அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு ஐசியூவில் இருந்த பாபுராஜ் வாழப்பள்ளி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மரணம் கேரள சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.