பாஜகவை சல்லி, சல்லியாக நொறுக்கிய வீடியோ…!
தேர்தல் என்றாலே விதவிதமான பிரச்சாரங்கள். இப்போது சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எப்படி, எப்படி எல்லாம் விளம்பரங்கள் வருகிறது என்பதை கணிக்க முடியாது.
தற்போது தேர்தல் நேரம் என்பதால் அந்தந்த கட்சிகள் வீடியோக்கள் மூலம் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவின் வீடியோ type பிரச்சாரம் என்பது வேற லெவல். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கை என்ற முழக்கத்தை முன் வைத்து டிசைன், டிசைனாக பிரச்சார வீடியோக்களை பதிவேற்றி வருகின்றன.
லேட்டஸ்ட்டாக இணையவாசிகளை போதும்டா சாமி.. என்று வயிறு குலுங்க வைத்துள்ளது ஒரு வீடியோ. அதில் பாஜகவையும், அதிமுகவையும் போட்டு பின்னி எடுத்து இருக்கிறது திமுக. அந்த வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.