சங்கி மந்திகள் தான் காரணம்…! 2ம் தூத்துக்குடி… பாஜகவை கிழித்த திமுக…!
சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு சங்கி மந்திகள் தான் காரணம் என்று போட்டு தாக்கி இருக்கிறார் திமுகவின் ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா.
கனியாமூர் சம்பவம் மாநில அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இதன் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் ஆளுங்கட்சியை போட்டு தாளித்துக் கொண்டு இருக்க திமுகவின் ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா வெளியிட்டு உள்ள பதிவு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கலவரத்துக்கு காரணம் சங்கி மந்திகள் என்றும் 2ம் தூத்துக்குடி சூழலை ஏற்படுத்த காவிக்கூட்டம் துடிப்பதாக கூறி உள்ளார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:
#திராவிட_மாடல் ஆட்சியில் இன்னொரு "தூத்துக்குடி சம்பவத்துக்கு" ஒரு போதும் இடம் கிடையாது.தூண்டி விடும் சங்கி மந்திகளை தொடர்ந்து நாம் அம்பலப்படுத்துவோம்.
Please show extreme restraint while dealing with such sensitive issues. Hope the family finds peace. Our CM will deliver Justice.
சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் போடப்பட்ட அனைத்து பதிவுகளையும் @ITWreports தொடர்ந்து பதிவிறக்கி வருகிறது.அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும். கலவரத்தை தூண்டிய அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும். மேலும் பதிவுகள் இருந்தால் @ITWreports tag செய்யவும் ...
நியாயமான விசாரணை நடைபெறும்.மாணவியின் குடும்பத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.இந்த சம்பவத்தில் அரசியல் லாபத்திற்காக கீழ்தரமான செயல்களை செய்திருக்கும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பது உறுதி. நிலைமையை தடம் பிறழாமல் மிக ஜாக்கிரதையாக கையாண்ட முதல்வருக்கு நன்றிகள்...
இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் எதையும் தீர விசாரிக்காமல் பதிவிடுவதை தவிர்க்குமாறு விங்கிற்கு அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவசரகதியில் பதிவிடக்கூடாது என உடன்பிறப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிரி எதிர்பார்த்தது "இரண்டாம் தூத்துக்குடி" இதில் யாருக்கும் சந்தேகமில்லை... என்று குறிப்பிட்டு உள்ளார்.