நல்ல சான்ஸ்..! மிஸ் செஞ்சிட்டிங்களே அண்ணாமலை…?
கோவை: கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் நல்ல வாய்ப்பை அண்ணாமலை மிஸ் செய்துவிட்டதாக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். போகிற இடங்களில் செந்தில் பாலாஜியை அண்ணாமலை அட்டாக் செய்ய, அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார் செந்தில் பாலாஜி.
தற்போது மின்கட்டண உயர்வின் மூலம் செந்தில் பாலாஜியை பாஜக அட்டாக் செய்து வருகிறது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. அதிமுக ஒரு பக்கம் போராட்டம் அறிவித்திருக்க. பாஜகவும் நேற்று போராட்டத்தை நடத்தி காட்டி இருக்கிறது.
மற்ற மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை விட கோவை போராட்டத்தை தான் அக்கட்சியினரே பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கு காரணம் போராட்டத்தில் அண்ணாமலையே கலந்து கொள்வதாக இருந்தது தான்.
ஆனால் போராட்டத்தை நடத்திய அண்ணாமலை கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார். டெல்லியில் ஜனாதிபதி பிரிவுபசார நிகழ்வை மையப்படுத்தி அண்ணாமலை தவிர்த்து இருக்கிறார். போராட்டத்தில் பாஜகவினர் கலந்து கொண்டிருந்தாலும், அண்ணாமலை பங்கு பெற்றிருந்தால் அதன் களமே மாறியிருக்கும் என்கின்றனர் நிர்வாகிகள்.
அவர்கள் கூறும் விவரம் இதுதான்: கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் அறிவித்த தருணத்தில் இருந்தே செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ஆகவே ஆகாது. தூக்கி போட்டு மிதிச்சிடுவேன் என்று அண்ணாமலை பேசியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
மின்துறை சம்பந்தமான ஒவ்வொரு அறிவிப்புகளின் போதும் அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி என்னும் அளவுக்கு அரசியல் களம் இருந்தது. இப்போது கோவை ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை இருந்திருந்தால் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருப்பார். ஆனால் இப்படிப்பட்ட அருமையான சான்சை மிஸ் செய்துவிட்டார்.
தாம் கலந்து கொள்வதற்கு பதிலாக தேசிய அளவில் தமிழகத்தில் இருக்கும் மகளிரணி தலைவி வானதி சீனிவாசனை அனுப்பி விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என்று கூறி உள்ளனர்.