Sunday, May 04 12:49 pm

Breaking News

Trending News :

no image

முடியல… மறுபடியும் புயலா..? வானிலை மையம் MESSAGE


சென்னை: அரபிக்கடலில் தற்போது உள்ள வானிலை நிலவரத்தை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டு இருக்கிறது.

மிக்ஜாம் புயலில் இருந்து சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்ட மக்கள் இன்னமும் மீளவில்லை. குடியிருப்புகளில் ஜம்மென்று அமர்ந்து கொண்ட மிக்ஜாம் புயல், மழை அகலவில்லை.

மிதக்கும் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் நிலை மாறவில்லை.. அரசு நிர்வாகத்தின் மீது கொந்தளிப்புடன் இருக்க… மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவுகளில் வளிமண்டல கீழடுக்கு நிலவுகிறது. இந்த சுழற்சியின் எதிரொலியாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

எதிர்வரும் 4 நாட்கள், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறி உள்ளது. முன்னதாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

Most Popular