ரஜினிகாந்துக்கு மத்திய அரசு செய்த திடீர் 'உதவி'..! ரசிகர்களே தெரியுமா...?
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல உள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல… இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் ஸ்டைலுக்கு மயங்கும் பலரும் அடுத்து வரக்கூடிய அண்ணாத்த படத்தை திரையுலககே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
ரஜினிகாந்த் சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டதால் அமெரிக்காவில் அவருக்கு மாற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு குறிப்பிட்ட இடைவேளையில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா ரஜினிகாந்த் சென்று வருவார்.
ஆனால் கொரோனா காலம் என்பதால் அவரது பயணம் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. அதே கால கட்டத்தில் அண்ணாத்த படத்தையும் வெகு சிறப்பாக அவர் ரஜினி முடித்துக் கொடுத்து உள்ளார். இதையடுத்து தற்போது அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்.
அதற்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லலாம் என்று திட்டமிட்டார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் தனி விமானம் தான் பெஸ்ட் என்பதை உணர்ந்து அதற்கான வேலைகளில் இறங்கி மத்திய அரசிடம் பயணத்துக்கான அனுமதியையும் பெற்றுவிட்டாராம்.
வெகு விரைவில் தனி விமானத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல உள்ளாராம். சிகிச்சை முடிந்து அண்ணாத்த படம் ரிலீசுக்கு தமிழகம் வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.