Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு காப்பு… அதிரடி காட்டிய கோர்ட்..!


டெல்லி: விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்து அதிரடி காட்டி உள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ளது திருவேம்பாலபுரம் என்ற கிராமம். இங்கு விவி மினரல்ஸ் கனிம அடிப்படையிலான பிளாண்ட் ஒன்று அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழ் தேவைப்பட்டது. அந்த சான்றிதழை மத்திய சுற்றுச்சுழல் துறை இணை இயக்குநர் நீரஜ் கட்கரி லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பான வழக்கு சிபிஐயால் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. டெல்லி சிறப்பு நீதிமன்ற விசாரணையில் அதிகாரி நீரஜ் கட்கரி, வைகுண்ட ராஜன், அவரது விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமி ஆகியோர் குற்றவாளிகள் என்று கடந்த 1ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இப்போது அதற்கான தண்டனை விவரங்களை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்து. அதிகாரி நீரஜ் கட்கரிக்கு 5 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம், வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3வது குற்றவாளியான சுப்புலட்சுமிக்கு 3 வருடம் சிறையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

உடல்நிலை மற்றும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக வைகுண்ட ராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

Most Popular